சுளுந்தீ - Sulunthee

சுளுந்தீ

சுளுந்தீ
ஆசிரியர்: முத்துநாகு
பதிப்பாளர்: ஆதி பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 4
ஆண்டு: ஜனவரி 2020
பக்கங்கள்: 480
எடை: 500 கிராம்
வகைப்பாடு: புதினம் (நாவல்)
ISBN: 978-81-934143-9-2

இருப்பு உள்ளது

விலை: ரூ. 250.00
தள்ளுபடி விலை: ரூ. 240.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத வரலாற்று நுண் அரசியல் ஆவணம். வரலாற்றைக் கதையாகவும், கதையை வரலாறாகவும் பேசுகிற பாணியில், எழுத்தின் வாயிலான ஒரு பெருங்கதைக்குள் பல்வேறு குடிகளின் வாழ்வியலைப் பேசுகிற இனவரைவியல் மற்றும் நிலத்தின் வரைவியல் பேசுகிற தமிழின் மிக முக்கியமான பெரும் புனைகதைப் படைப்பிலக்கியமாக வெளிவரப் போகிறது சுளுந்தீ எனும் நூல். தமிழ்ச் சமூக வரலாற்றை எழுதவும் பேசவும் கூடியவர்கள் மறைத்த, மறந்த, மறுத்த ஒரு காலகட்டம் குறித்த வரலாற்றுத் தரவுகளை, மக்களின் வாய்மொழி, பண்பாடு, மற்றும் ஆவணக் குறிப்புகள் போன்ற வரலாற்றுக் குறிப்புகளோடு புனைகதையாகப் புலப்படுத்தி இருக்கிறார் தோழர் இரா.முத்துநாகு. தமிழகத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்த தெலுங்கின நாயக்கர்களின் ஆட்சிக் காலத்தில், நிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டிருந்த தமிழ் உழவுக்குடிகளிடமிருந்த வேளாண்மை நிலங்கள் பறிக்கப்பட்ட வரலாற்றை மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறது இந்நூல். தமிழ்க் குடிகளுக்கும் தமிழ் அல்லாத குடிகளுக்குமான முரணும் பகையும் குறித்து மிக நுணுக்கமாகவும் ஆழமாகவும் விவரித்திருக்கிறது. நாயக்கர் ஆட்சிக் காலத்தில் நிலவிய அதிகாரத்தின் கோர முகங்களையும், அவ் அதிகாரத்தை எதிர்த்து நின்ற பல்வேறு சமூகக் குடிகளின் வாழ்வையும் பேசுபொருளாகக் கொண்டிருக்கும் இந்நூல், தமிழ்ச் சமூக வரலாற்றுக்குப் புதிய தரவுகளை நிறையவே தந்திருக்கிறது. இன்றைய சமூக அமைப்பில் விளிம்பு நிலைச் சமூகங்களாகக் கருதப்படுகிற பல சமூகக் குடிகள், அக்காலகட்டத்தில் அறிவும் திறமும் பெற்றிருந்த சமூக ஆளுமை மிக்கதாக இருந்த வரலாற்றை நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறது இந்நூல். குறிப்பாக, தமிழ் நிலத்தின் மருத்துவ அறிவும் நுட்பமும் முறைகளும் கற்றுத் தேர்ந்திருந்த சித்த மருத்துவப் பண்டுவர்களான நாவிதர் பற்றிய விரிவான விவரிப்புகள் சமூக முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் மட்டுமல்ல; தமிழில் இதுவரையிலும் பதிவாகாத செய்திகளும் கூட. தமிழ் நிலத்தின் தமிழ்ப் பூர்வீகக் குடிகளைக் குறித்தும், வந்து குடியேறிய தமிழ் அல்லாத குடிகளைக் குறித்தும் மிக விரிவாகவும் நுணுக்கமாகவும் நேர்மையாகவும் இந்நூல் பதிவு செய்திருப்பதாகவே என் வாசிப்பில் உணர்கிறேன். தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத வரலாற்று ஆவணமாகவே இப்பெருங்கதை நிலைத்திருக்கப்போகிறது என்பதே இந்நூலின் சிறப்பாகும். இந்நூல், வெறும் கற்பனையோ அல்லது சிறுகச் சேர்த்த புனைவோ என்பதைக் கடந்து, கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேகரித்த மக்களின் வழக்காற்று ஆவணங்களே ஒரு பெருங்கதைக்குள் உலவித் திரிகின்றன. அவ்வகையில், மக்கள் வரலாற்றையும் வழக்காற்றையும் எழுத்தில் பதிவு செய்திருக்கும் தோழர் இரா.முத்துநாகு அவர்களின் தேடலும் உழைப்பும் ஒவ்வோர் எழுத்திலும் படிந்திருக்கிறது. - ஏர் மகாராசன்

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.