ஜி.எஸ்.டி. ஒரு வணிகனின் பார்வையில்...! - GST Oru Vaniganin Paarvaiyil |
ஜி.எஸ்.டி. ஒரு வணிகனின் பார்வையில்...! ![]() பதிப்பாளர்: இந்து தமிழ் திசை பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஜூன் 2017 பக்கங்கள்: 96 எடை: 150 கிராம் வகைப்பாடு : வர்த்தகம் ISBN: 978-81-934362-1-9 இருப்பு உள்ளது விலை: ரூ. 100.00 தள்ளுபடி விலை: ரூ. 90.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: இந்திய தேசத்தில் வணிகம் செய்வோர் யாராக இருந்தாலும், அவர்கள் நினைவிலும் பேச்சிலும் நீங்காமல் நிறைந்திருப்பது ஜி.எஸ்.டி.! ஒரே தேசம்... ஒரே வரி... ஒரே சந்தை... என்ற முழக்கத்துடன் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துவிட்டது `சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஜிஎஸ்டி. பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போதுதான் வரி பற்றிய சிந்தனை மற்றும் பேச்சு மக்களிடையே மேலோங்கியிருக்கும். அதுவும் பட்ஜெட்டில் போடப்படும் புதிய வரிவிதிப்புகளால் தொழில் செய்வோர் மட்டுமின்றி, தங்களுக்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்படுமோ என்று நுகர்வோராகிய பொதுமக்களும் கவலைப்படுவது சகஜம். அதுபோலவே, 2000-வது ஆண்டிலிருந்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டு தற்போது அமலுக்கு வந்துவிட்ட ஜிஎஸ்டி-யின் சாதக, பாதக அம்சங்களை அறிந்து கொள்ள வர்த்தகர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் ஆர்வம் மேலோங்கியிருக்கிறது. `அறிவோம் ஜிஎஸ்டி என்ற பகுதியை `தி இந்து நாளிதழின் வணிகப் பகுதியில் அறிமுகப்படுத்தியபோது, வந்து குவிந்த கேள்விகளும் இதை உறுதிபடுத்தியது. அதுமட்டுமல்ல... இதற்கென்றே தி இந்து தமிழ் நாளிதழ் பல்வேறு நகரங்களில் நடத்திய பயிலரங்கத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தங்கள் சந்தேகங்களை முன் வைத்தனர். அரசுத் துறை அதிகாரிகள், ஆடிட்டர்களுடன் ஜி.எஸ்.டி. குறித்த ஆழ்ந்த புரிதல் கொண்ட மற்றபல வல்லுநர்களும், இந்த பயிலரங்கத்தில் அற்புதமான விளக்கங்களை அளித்தனர். அதில் முக்கிய மானவர் - தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலை தலைவரான எஸ்.இரத்தினவேல். அவர் G.S.T - யின் Brand Ambassador ஆகவே செயல்படுகிறார். வணிகம் மற்றும் வரி விதிப்பு குறித்து அவருக்கு இருக்கும் நீண்ட கால அனுபவம் அந்த பயிலரங்கம் தாண்டி, தமிழகத்தின் அனைத்து வணிகர்களுக்கும் பயன் தர வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவாகப் பிறந்ததே இந்தப் புத்தகம். எஸ்.இரத்தினவேல் எழுதி அளித்திருக்கும் `ஒரு வணிகனின் பார்வையில் ஜிஎஸ்டி என்ற இந்தப் புத்தகம், ஜிஎஸ்டி குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கும் வகையில் கேள்வி - பதில் பாணியிலேயே அமைந்திருப்பது தனிச் சிறப்பு. ஜிஎஸ்டி குறித்த இவரது புதிய படைப்பு ஒருமுனை வரி விதிப்பில் நிலவும் சந்தேகங்களை நிச்சயம் போக்கும். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் அந்திமழை அழகிய தமிழ் மகள் பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு ஏகம் பதிப்பகம் க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணகி பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் நீலம் பதிப்பகம் பரிசல் புத்தக நிலையம் பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2023 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |