ஒரு கடலோர கிராமத்தின் கதை - Oru Kadalora Gramaththin Kathai

ஒரு கடலோர கிராமத்தின் கதை

ஒரு கடலோர கிராமத்தின் கதை
ஆசிரியர்: தோப்பில் முஹம்மது மீரான்
பதிப்பாளர்: காலச்சுவடு பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 8
ஆண்டு: ஜனவரி 2021
பக்கங்கள்: 216
எடை: 200 கிராம்
வகைப்பாடு: புதினம் (நாவல்)
ISBN: 978-81-87477-87-7

இருப்பு உள்ளது

விலை: ரூ. 270.00
தள்ளுபடி விலை: ரூ. 240.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: இசுலாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல். கிராமத் தலைவனும் ஊர் முதல் குடியுமான வடக்கு வீட்டு அகமதுக்கண்ணு முதலாளியின் முன் அடங்க மறுக்கிறான். சுறாப் பீலி வியாபாரம் செய்யும் மஹ்மூது, தென் பத்தனைத் தேடி வந்த சித்து வேலைகள் தெரிந்த மாலத்தீவு தங்ஙளையும் அவன் உதாசீனம் செய்கிறான். இதை மீறலின் குறியீடாகக் கருதும் வாசக மனம் கூடவே மஹ்மூதின் மனைவியையும் மகளையும் நினைத்து வருந்துகிறது. வடக்கு வீட்டு முதலாளியின் இரக்கமற்ற செயல்கள் குறித்து நாவல் விவரித்துச் செல்லும்போதே அதன் அடிநாதமாக, வெற்றுப் பிரதாபம் காரணமாக நசிந்து கொண்டிருக்கும் முதலாளியைப் பற்றிய பரிதாபமும் இழைந்து செல்கிறது.

நாவல் கோடிகாட்டும் அம்சங்கள்கூட வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகி வாசக மனங்களை உலுக்குவது இந்நாவலின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பு.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.