நேர நிர்வாகம் - Time Management : The Brian Tracy Success Library

நேர நிர்வாகம்

நேர நிர்வாகம்
ஆசிரியர்: பிரையன் டிரேசி
மொழிபெயர்ப்பாளர்: நாகலட்சுமி சண்முகம்
பதிப்பாளர்: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 8
ஆண்டு: 2024
பக்கங்கள்: 124
எடை: 150 கிராம்
வகைப்பாடு: சுயமுன்னேற்றம்
ISBN: 978-93-87383-46-3

இருப்பு உள்ளது

விலை: ரூ. 199.00
தள்ளுபடி விலை: ரூ. 180.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: வேறு எதுவொன்றையும் விட, நேரத்தை நிர்வகிப்பதற்கான உங்கள் திறன் தான் உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கின்ற மிகப் பெரிய காரணியாகத் திகழுகிறது. நீங்கள் உங்கள் நேரத்தை எவ்வளவு அதிகச் சிறப்பாகப் பயன்படுத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமான விஷயங்களை நீங்கள் சாதிப்பீர்கள். இந்தச் சுருக்கமான வழிகாட்டி நூல், நீங்கள் தினமும் கூடுதலாக இரண்டு மணி நேரத்தைப் பெறுவதற்கு உங்களுக்கு உதவக்கூடிய 21 உத்திகளை உள்ளடக்கியது. பிரையன் டிரேசி உட்பட, வெற்றியாளர்கள் பலரும் இன்றளவும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற உத்திகள் இவை. இந்நூலில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ளக்கூடிய சில விஷயங்கள் பின்வருமாறு:

-முடிவற்ற இடையூறுகள், சந்திப்புக் கூட்டங்கள், மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றைக் கையாளுவது எப்படி?

-முன்னுரிமைப் பட்டியலில் மேல்மட்டத்தில் இருக்கின்ற விஷயங்களுக்குப் போதிய நேரம் ஒதுக்குவது எப்படி?

-ஒரே மாதிரியான விஷயங்களை ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் அவற்றைச் செய்து முடிப்பது எப்படி?

-காலம் தாழ்த்தும் பழக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி?

-எந்த வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்மானிப்பது எப்படி?

-உங்கள் இலக்குகளை அடைவதற்கு எதிர்காலத்திலிருந்து பின்னோக்கிச் செயல்படுவது எப்படி?

இவை போன்ற இன்னும் ஏராளமான விஷயங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. எளிதாகக் கடைபிடிக்கத்தக்க இந்த உத்திகளை நீங்கள் பயன்படுத்தும்போது, குறைவான நேரத்தில் அதிகமான வேலைகளை நீங்கள் செய்து முடிப்பீர்கள், அதுவும் ஆசுவாசமாக!

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.