நேற்றைய காற்று - Netraiya Kaatru

நேற்றைய காற்று

நேற்றைய காற்று
ஆசிரியர்: யுகபாரதி
பதிப்பாளர்: நேர்நிரை
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: மார்ச் 2024
பக்கங்கள்: 496
எடை: 400 கிராம்
வகைப்பாடு: கட்டுரை
ISBN: 9788190366540

இருப்பு உள்ளது

விலை: ரூ. 500.00
தள்ளுபடி விலை: ரூ. 450.00

அஞ்சல் செலவு: ரூ. 50.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: இருபது திரைக்கவிராயர்களின் அகத்தையும் முகத்தையும் காட்டும் இந்நூல், யுகபாரதியின் பதினொன்றாவது கட்டுரைத் தொகுப்பு. வியத்தலையும் ரசித்தலையும் அடிப்படையாக வைத்தே அவர் இந்நூலை ஆக்கியிருக்கிறார். என்றாலும், அதனூடே அவர் சொல்லிச் செல்லும் வரலாற்றுத் தகவல்கள் வாசிப்பை சுவாரஸ்யப்படுத்துகிறது. நாம் அறியாமல் போன பல பாடலாசிரியர்களின் தனித்துவங்கள் இக்கட்டுரைகளில் வெளிப்பட்டுள்ளன. அரசியல் புரிதலுடன் திரைப்படால்களை அணுகி, அவற்றை எழுதியவர்களின் முழுச் சித்திரத்தையும் யுகபாரதி இந்நூலில் அறியத் தந்திருக்கிறார். கால மாற்றங்களுக்கேற்பத் திரைப்பாடல்கள் தங்கள் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் எந்தெந்த விதத்தில் கட்டமைத்துள்ளன என்பதை எளிய நடையில் எழுதியிருக்கிறார். நாம் கேட்ட ஒவ்வொரு பாடலுக்குப் பின்னும் ஓர் அரசியலோ சம்பவமோ உள்ளதை அவருக்கே உரிய மொழியில் ஆச்சர்யப்படும் வகையில் அளித்திருக்கிறார். அரிய தரவுகளுடன் ஆழ்ந்த பார்வையைத் திரைப்பாடல் மீது வைத்திருக்கும் அவர், இந்நூல் மூலம் புதிய காற்றையும் புதிய வெளிச்சத்தையும் பரவ விட்டிருக்கிறார். நூறாண்டுக்கால தமிழ்த் திரைப்பாடல்களையும் அவற்றை எழுதிய ஆசிரியர்களையும் கொள்கைப் பின்னணியுடன் புரிந்து கொள்ள இதுவே முதல் நூல்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.