தாவூத் இப்ராகிம் - Dawood Ibrahim

தாவூத் இப்ராகிம்

தாவூத் இப்ராகிம்
ஆசிரியர்: ஹுஸேன் சைதி
மொழிபெயர்ப்பாளர்: கார்த்திகா குமாரி
பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2019
பக்கங்கள்: 472
எடை: 535 கிராம்
வகைப்பாடு : வாழ்க்கை வரலாறு
ISBN: 978-93-83067-41-1

இருப்பு உள்ளது

விலை: ரூ. 433.00
தள்ளுபடி விலை: ரூ. 390.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: மும்பை மாஃபியாவைப் பற்றிய வரலாற்று ரீதியான ஒரு முக்கியமான முதல் தொகுப்பு டோங்கிரிலிருந்து துபாய்க்கு புத்தகம். ஹாஜி மஸ்தான், கரீம் லாலா, வரதராஜ முதலியார், அபு சலீம் போன்ற முக்கிய குற்றவாளிகளின் கதை இது. அதை விட முக்கியமாக காவல்துறையில் பணியாற்றிய ஒருவருடைய மகன் குற்றவாளியான கதை இது. ஆரம்பத்தில் மும்பை காவல்துறையின் பகடைக்காயாக இருந்த தாவூத் இப்ராகிம் அவர்களுக்காக எதிரிகளை ஒழிக்கத் தொடங்கி ஒருகட்டத்தில் மும்பை காவல்துறைக்கே எதிரியாக மாறினான். இந்தப் புத்தகத்தில் இந்தியாவின் பல குற்றங்கள் பற்றியும் தகவல்கள் இருக்கின்றன. பதான்களின் வளர்ச்சி, தாவூத் குழு உருவானது, முதல் சுபாரி, பாலிவுட்டில் மாஃபியாவின் தலையீடு, கராச்சியில் தாவூத் குடியேறியது, உலகின் முக்கிய குற்றவாளி ஒருவனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்திருப்பதாக சொல்லப்படுவது என பல விஷயங்களைப் பற்றிச் சொல்கிறது. இந்தக் கதை முக்கியமாக டோங்கிரியில் இருந்து துபாய்க்குச் சென்று டானாக மாறிய ஒரு சிறுவனைப் பற்றியது. அவனது தைரியம், நோக்கம், குள்ளநரித்தந்திரம், லட்சியம், அதிகார வெறி போன்ற பல விஷயங்களைப் பற்றி சுவாரஸ்யமாகப் பேசுகிறது. மிக ஆழமாக ஆராய்ச்சி செய்யப்பட்ட இந்த புத்தகம் மாஃபியாவின் அதிகார விளையாட்டுகள் பற்றியும், பயங்கரமான போர்முறைகள் பற்றியும் சொல்கிறது. எஸ்.ஹுஸைன் ஸைதி, மும்பை மீடியாவில் எழுதி வரும் மும்பையைச் சேர்ந்த ஒரு முக்கியமான க்ரைம் ரிப்போர்ட்டர். இவர் ஆஸியன் ஏஜ், மும்பை மிரர், மிட் டே, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பல பத்திரிகைகளில் பணியாற்றியிருக்கிறார். 26/11 மும்பை தாக்குதல்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட HBOவின் ஆவணப்படமான terror in mumbaiயில் துணைத் தயாரிப்பாளராக பணியாற்றிருக்கிறார் ஸைதி. இவர் மும்பையில் தன் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.