வாடிக்கையாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்! நூல்களின் விலை மற்றும் அவற்றின் இருப்பு ஆகியவை அடிக்கடி மாறும் சூழ்நிலை உள்ளதால், தயவு செய்து தங்களுக்கு விருப்பமான நூல்களை தேர்வு செய்த பின் எமது தொலைபேசிக்கு (9444086888) தொடர்பு கொண்டு விலை மற்றும் இருப்பை உறுதி படுத்திக் கொள்ளவும். அல்லது எமது வாட்சப் எண்ணிற்கு (9444086888) நூல்களின் விவரங்களை அனுப்பினால் உடன் தாங்கள் விரும்பும் நூல் குறித்த விவரங்களை அனுப்புகிறோம். |
தமிழ் சினிமா 100: சில குறிப்புகள் - Tamil Cinema 100 : Sila Kuripugal |
தமிழ் சினிமா 100: சில குறிப்புகள் ![]() பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 376 எடை: 430 கிராம் வகைப்பாடு : சினிமா ISBN: 978-93-83067-16-9 இருப்பு உள்ளது விலை: ரூ. 285.00 தள்ளுபடி விலை: ரூ. 260.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: தமிழ் சினிமா செதுக்கிய சிற்பங்களையும் தமிழ் சினிமாவைச் செதுக்கிய சிற்பிகளையும் அறிமுகம் செய்யும் ஆச்சரியத் தொகுப்பு. ஆரம்பகால சினிமா தொடங்கி இன்றைய காலகட்டம் வரை தமிழ் சினிமா உருவாக்கித் தந்திருக்கும் ஆளுமைகளின் எண்ணிக்கை அபரிமிதமானது. ஆனால் அவர்கள் பற்றிய தகவல்களோ, குறிப்புகளோ போதுமான அளவுக்குப் பதிவுசெய்யப்படவில்லை. இந்த ஏக்கத்தை நாற்பதாண்டு கால அனுபவம் பெற்ற மூத்த பத்திரிகையாளர் பி.எல். ராஜேந்திரன் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம் பெருமளவு தீர்த்துவைத்துள்ளது. தமிழ் சினிமாவின் உருவாக்கத்திலும் விரிவாக்கத்திலும் பங்களிப்பு செய்த அந்தக் கலைஞர்கள் பற்றிய நுணுக்கமான பல தகவல்களைக் கொண்டு இந்தப் புத்தகத்தில், வியப்பூட்டும் பல செய்திகளை வெகு இயல்பாகப் பதிவுசெய்திருக்கிறார் நூலாசிரியர். புகழ்பெற்ற இயக்குனர் பீம்சிங்கின் ”ப” வரிசைப் படங்கள் எல்லாம் வெற்றி பெற்றவை என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் பீம்சிங்கின் பழனி என்ற படம் தோல்விப்படம். ஜெமினி தயாரித்த அவ்வையார் படத்தில் அற்புதமான எழுத்தாளரான புதுமைப்பித்தன் எழுதிய வசனங்கள் இடம்பெறவில்லை. பெருவெற்றியைப் பெற்ற மனோகரா படத்தில் சிவாஜிக்கு முன்பு நடிக்க இருந்தவர் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி. இப்படி இன்னும் இன்னும் பல சுவாரஸ்யத் தகவல்களை இந்தப் புத்தகத்தில் கண்டெடுக்கலாம். ஆச்சரியங்களுக்கு மட்டுமல்ல, அதிர்ச்சிகளுக்கும் ஆங்காங்கே இடமிருக்கிறது. தமிழ் சினிமாவின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள விரும்புவோருக்கு இந்தப் புத்தகம் பொருத்தமான ஒன்று! நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் பரிசல் புத்தக நிலையம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2023 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |