சீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா - Secrets of Tamil Cinema |
சீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா ![]() பதிப்பாளர்: சூரியன் பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: டிசம்பர் 2013 பக்கங்கள்: 192 எடை: 250 கிராம் வகைப்பாடு : சினிமா ISBN: இருப்பு உள்ளது விலை: ரூ. 150.00 தள்ளுபடி விலை: ரூ. 135.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது; தமிழ் சினிமா தனது 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. இத்தனை ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் சாதனைகள் பற்றியும், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் போன்றவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் பற்றியும் ஏராளமான புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஆனால் சினிமா உலகத்தில் நடைபெறும் பின்னணி விஷயங்கள் பற்றி எழுதப்பட்டது மிகக் குறைவு. முன் எப்போதையும்விட பெரும் நெருக்கடியை திரைப்பட உலகம் இப்போது சந்தித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. அவற்றில் வெற்றி பெறும் படங்களை விரல் விட்டு எண்ண வேண்டிய நிலை. அறிமுகம் ஆகும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் எத்தனை பேருக்கு இங்கே பிரகாசமான எதிர்காலம் கிடைத்திருக்கிறது? கோடிகளில் முதலீடு செய்த தயாரிப்பாளர்களில் எத்தனை பேர் லாபம் சம்பாதித்து சந்தோஷம் அடைந்தார்கள்? படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு எத்தனை படங்கள் திருப்தியான பொழுதுபோக்கைத் தந்தன? இப்படி நிறைய கேள்விகள் எழுகின்றன. சினிமாவை வெறும் கலை என ஒதுக்கி உயரத்தில் வைத்துவிட முடியாது! அது ஒரு தொழில். தமிழ் சினிமா ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் புழங்கும் ஒரு உலகம். அது செழிப்பாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அதற்கான வழிகளை இந்த நூலில் அலசுகிறார் பைம்பொழில் மீரான். ‘தினகரன்’ நாளிதழின் சினிமா பத்திரிகையாளராக அனுபவம் சேகரித்திருக்கும் இவர், ‘வண்ணத்திரை’ இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். தமிழ் சினிமாவின் பின்னணி உலகத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் இதை அவசியம் படிக்க வேண்டும். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் அந்திமழை அழகிய தமிழ் மகள் பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு ஏகம் பதிப்பகம் க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணகி பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் நீலம் பதிப்பகம் பரிசல் புத்தக நிலையம் பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2023 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |