108 திவ்ய தேச உலா - பாகம் 1 - 108 Divya Desa Ula - Part 1 |
108 திவ்ய தேச உலா - பாகம் 1 ![]() பதிப்பாளர்: சூரியன் பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : ஆன்மிகம் ISBN: இருப்பு உள்ளது விலை: ரூ. 225.00 தள்ளுபடி விலை: ரூ. 220.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துவைத்த இந்தத் திருக்கோயில்களில் பல, ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்ப்பதும்; தொலைவு, பயண நேரம், போக்குவரத்து வசதிக் குறைவு போன்ற காரணங்களால் சிலவற்றிற்கு பக்தர்கள் குறைந்த அளவே வருவதுமாக இருக்கிறது. ஆனால் தன்னைக் காண இயலாத நிலையிலுள்ள பக்தர்களை, உற்சவராக, வீதிவுலா வந்து அவரவர் இல்லங்களுக்கு முன் நின்று தரிசனம் காட்டும் இறைவனின் பெருங்கருணை, பேரானந்தத்தை அளிக்க வல்லது. அதேபோன்றதுதான் திருத்தலங்கள் பற்றிய புத்தகங்களும். இவை அந்தக் கோயில்களை உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து, உங்கள் மடியில் நிர்மாணிக்கின்றன. இப்போது உங்கள் கரங்களில் தவழும் 108 திவ்ய தேச உலா புத்தகமும் அப்படிப்பட்டதுதான். அபூர்வமான புகைப்படங்களும் இந்த நூலுக்கு அழகு சேர்க்கின்றன. பரவசத்தோடு வழிபட வண்ணப்படங்களும் உண்டு. இது முதல் பாகம். இந்த பாகம் மட்டுமன்றி, திவ்ய தேச உலாவின் அடுத்தடுத்த பாகங்களும் உங்கள் பக்தி உணர்வுக்கு திவ்ய பிரசாதங்களாக அமையவிருக்கின்றன. நேரடியாக வாங்க : +91-94440-86888
|

