சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் - பாகம் 1 - Sikkalgal Theerkka Siddhargal Vazhikattum Aalayangal - Part-1 |
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் - பாகம் 1 ![]() பதிப்பாளர்: சூரியன் பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 5 ஆண்டு: செப்டம்பர் 2016 பக்கங்கள்: 272 எடை: 350 கிராம் வகைப்பாடு : ஆன்மிகம் ISBN: 978-93-85118-20-3 இருப்பு இல்லை விலை: ரூ. 200.00 தள்ளுபடி விலை: ரூ. 180.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: தீர்க்க முடியாத சிக்கல்களுக்குள் புதைந்துவிடும்போது, வேறு வழியின்றி இறையருளை நாடுகிறது மனம். போட்டிகளும் அவசரமும் நிறைந்த யுகம் இது. இந்தக் காரணங்களாலேயே அநேக பிரச்னைகளையும் பலர் எதிர்கொள்ள நேர்கிறது. தனிப்பட்ட முயற்சிகளோடு தெய்வ சக்தியும் இணைந்தால், பிரச்னைகளிலிருந்து எளிதில் மீள முடியும். அதற்கு வழிகாட்டும்விதமாக ‘தினகரன் ஆன்மிக மலரில்’ வெளியாகி, லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற பகுதி, அதன்பின் நூல் வடிவம் பெற்றது. என்ன பிரச்னைக்கு எந்தக் கோயிலில் வழிபட்டால் தீர்வு கிடைக்கும் என நம் மண்ணில் வாழ்ந்த சித்தர்கள் பலரும் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அந்த சித்தர்களின் வாக்கை அனைவரும் புரிந்து பயன்பெறும் வகையில் எளிய நடையில் விவரிக்கிறது இந்த நூல். ‘முப்பத்தாறு பௌர்ணமிகளில் திருவண்ணாமலை கிரிவலம் செய்தால் திருமணத் தடை விலகும்’ என்கிறார் காகபுஜண்டர். ‘திருவாரூர் கமலாலயக் குளத்தில் நீராடி கமலாம்பாளை வணங்கினால் இதயக் கோளாறுகள் நீங்கும்’ என்கிறார் சிவ வாக்கியர். ‘பதினெட்டு பௌர்ணமிகளில் விரதம் இருந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயியைத் தொழுதால் கல்வியில் சிறக்கலாம்’ என்கிறார் அகத்தியர். ‘திருநாவலூர் பக்த ஜனேஸ்வரரை துதித்தால் கடன் தொல்லை தீரும்’ என்கிறார் குதம்பை சித்தர். இப்படி இந்த நூல் ஏராளமான கோயில்களை புதிய பரிமாணத்தில் உங்களுக்குக் காட்டுகிறது. அறிமுகமான வேகத்திலேயே நூற்றுக்கணக்கான பிரதிகள் விற்று, விற்பனையில் சாதனை புரிந்த நூல் இது. நேரடியாக வாங்க : +91-94440-86888
|