துளசிதாசர் முதல் மீராபாய் வரை - Thulasidasar Mudhal Meerabai Varai |
துளசிதாசர் முதல் மீராபாய் வரை ![]() பதிப்பாளர்: சூரியன் பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : ஆன்மிகம் ISBN: இருப்பு உள்ளது விலை: ரூ. 150.00 தள்ளுபடி விலை: ரூ. 135.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ‘‘நான் கடவுளைப் பார்க்க வேண்டும். நீங்களும் நானும் எப்படி நேருக்கு நேராகப் பார்க்கிறோமோ, அதே போல பார்க்க வேண்டும். உங்களால் எனக்கு கடவுளைக் காட்ட முடியுமா?’’ என பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பார்த்துக் கேட்ட நரேந்திரன், அவரின் அருளால் காளியின் தரிசனம் பெற்றார். அதுவும் அவர் விரும்பியது போல நேருக்கு நேராகவே... விவேகானந்தனாய் நிமிர்ந்தார். பக்தி அல்லது ஞானம் என்கிற சாவி ஆன்மிக உலகின் அற்புத வாசலைத் திறந்து விடுகிறது. மகோன்னதமான அந்த உலகத்திற்கான பாமர மொழி பக்தி செய்வது - அதுவும் திகட்டத் திகட்ட பக்தி செய்வது மட்டுமே. அந்த பக்தி, பக்தனை நோக்கி கடவுளை இழுத்து வந்து இருவரையும் பிணைத்து விடுகிறது. இந்த வகையில் பாண்டுரங்கன் பக்திக்கு கட்டுப்பட்டவன் என உறுதி செய்கிறது இந்த நூல். சைவ சமயத்தில் ஈசன் பல திருவிளையாடல்கள் புரிந்து தன் பக்தனைத் தம்மோடு இணைத்துக் கொண்டதை பெரிய புராணம் கதை கதையாய் பாடிக் களித்தது போலவே, வைணவ பக்தர்களை மகாவிஷ்ணு எப்படி எப்படியெல்லாம் தேடிச் சென்று அருள் செய்தான் என்பதை விதவிதமாகச் சொல்கிறது இந்த புத்தகம். வழிபாடு, கடவுள் என எதுவானாலும் அதில் ‘தீவிர பக்தி செய்’ என்றுதான் நம் முன்னோர்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி சொல்லி இருக்கிறார்கள். இதில் என்ன விசேஷம் தெரியுமா? பக்தி என்றால் எல்லாவற்றையும் விட்டு விட்டு கண்மூடி காட்டில் அமர்ந்து தியானித்துக் கொண்டிரு என்பதல்ல. முதலில் கடமை, கூடவே கடவுள் என்பதாக... எளியவனுக்கான கடவுளாய் நிற்கிறான், செங்கல்லில் நம் பாண்டுரங்கன். நீங்கள் புரட்டும் பக்கங்களில் எல்லாம் அவன் அருள் ததும்பி வழியும். உள்ளம் பக்தியால் விகசிக்கும்! நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் அந்திமழை அழகிய தமிழ் மகள் பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு ஏகம் பதிப்பகம் க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணகி பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் நீலம் பதிப்பகம் பரிசல் புத்தக நிலையம் பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2023 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |