திருப்பங்கள் தரும் திருக்கோயில்கள் - Thiruppangal Tharum Thirukkoilgal |
திருப்பங்கள் தரும் திருக் கோயில்கள் ![]() பதிப்பாளர்: சூரியன் பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 2 ஆண்டு: பிப்ரவரி 2021 பக்கங்கள்: 320 எடை: 300 கிராம் வகைப்பாடு : ஆன்மிகம் ISBN: 978-93-85118-78-4 இருப்பு இல்லை விலை: ரூ. 200.00 தள்ளுபடி விலை: ரூ. 190.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வரும் ஆலயங்கள் போலவே, பலரும் அதிகம் அறிந்திராத ஆலயங்களையும் அறிமுகம் செய்கிறது இந்த நூல். அல்லல்களை அகற்றும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி, தன் வலப்பக்கத்தில் ஈசன் அமர்ந்திருக்க, தன் பாதத்தில் பிரம்ம கபாலத்தின் தலையை அழுத்தியபடி உக்கிரம் பெருக்கி அமர்ந்திருக்கிறாள். புற்று மண்ணும், குங்குமமும்தான் இங்கு பிரசாதமாய் வழங்குகின்றனர். மேல்மலையனூர் சென்று வந்தால் உங்கள் வாழ்வு மேன்மை அடையும். மருத்துவக்குடி திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார் விருச்சிகப் பிள்ளையார். விருச்சிக ராசிக்காரர்கள் இந்தப் பிள்ளையாரை வணங்க, அவர்கள் வாழ்வு விண்ணுயரும் என்பது உறுதி. விடாது துரத்தும் நோய் எதுவாயினும், திருநெய்த்தானம் இறைவன் நெய்யாடியப்பரின் அமுதமான நெய்யை எடுத்துக் கொள்ள தானாக நோய்கள் காணாது போகின்றன. குழந்தைப் பாக்கியம் வேண்டி தில்லைவிளாகம் ராமர் தீர்த்தத்தில் நீராடி, சந்தான கிருஷ்ணனைக் கணவனும், மனைவியுமாக கையில் ஏந்தி மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள் பலர். வெகுவிரைவில் அவர்கள் குழந்தையோடு இங்கு திரும்பி வருவார்கள். இப்படிப் பல ஆலயங்களின் பரவச தரிசனத்தை நூல் முழுவதும் கண்டடையலாம்! நேரடியாக வாங்க : +91-94440-86888
|