எம்.கே. தியாகராஜ பாகவதர் - M.K. Thiyagaraja Bagavadhar |
எம்.கே. தியாகராஜ பாகவதர் ஆசிரியர்: ஜெ. ராம்கி பதிப்பாளர்: வானவில் புத்தகாலயம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 136 எடை: 170 கிராம் வகைப்பாடு : வாழ்க்கை வரலாறு ISBN: 978-93-82578-73-4 இருப்பு உள்ளது விலை: ரூ. 128.00 தள்ளுபடி விலை: ரூ. 115.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: வெள்ளித்திரைக்கு வந்தபிறகு பிரபலமடைந்தவர் அல்ல பாகவதர். நாடகத்துறையில் இருந்தபோதே வெற்றியின் உச்சத்தைத் தொட்டவர். அதன் காரணமாகவே வெள்ளித்திரைக்கு வந்து, வசூல் நாயகனாகவும் வலம்வந்தவர். பொதுவாக பாகவதர் என்றால் மன்மத லீலை பாடலைப் பற்றிப் பேசுவார்கள். ஆண்டுக்கணக்கில் அவர் படங்கள் ஓடின என்பார்கள். மிஞ்சிப்போனால், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு பற்றி மேலெழுந்த வாரியாகப் பேசுவார்கள். ஆனால் அதையும் தாண்டி பாகவதரின் வாழ்க்கையில் பேசுவதற்குப் பல விஷயங்கள் உள்ளன என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு சாட்சி. வெற்றிக்கோட்டையில் உச்சாணிக்கொம்பில் உட்கார்ந்திருந்த பாகவதரை லட்சுமிகாந்தன் கொலைவழக்கு என்ற ஒற்றை வழக்கு தோல்வியின் அதளபாளத்துக்குக் கொண்டுவந்த விதத்தை நேர்மையாகப் பதிவுசெய்திருக்கிறார் நூலாசிரியர் ஜெ. ராம்கி. ஒருவகையில், பாகவதரின் வாழ்க்கை ஒவ்வொரு திரைக்கலைஞருக்கும் பாடம். பாகவதரின் கலை வாழ்க்கையை வாசிக்கும்போது நாடகங்கள் எவ்வாறு நடத்தப்பட்டன, அதை மக்கள் எப்படி ரசித்தார்கள், நாடகம் ஏன் திரைப்படமாக எடுக்கப்பட்டது, நாடகத்தை ரசித்தவர்கள் சினிமாவை எப்படி ஏற்றுக் கொண்டார்கள், நடிகர்களை எப்படிக் கொண்டாடினார்கள், ஒரு சூப்பர்ஸ்டார் உருவானது எப்படி? என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகம் ஓர் உரைகல். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
© 2024 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |