நேசமணி தத்துவங்கள் - Nesamani Thaththuvangal |
நேசமணி தத்துவங்கள் ![]() பதிப்பாளர்: வானவில் புத்தகாலயம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 112 எடை: 145 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: 978-93-87369-09-2 இருப்பு உள்ளது விலை: ரூ. 105.00 தள்ளுபடி விலை: ரூ. 95.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: தமிழ்த் திரையுலகில் வைகைப்புயல் வடிவேலு அவர்களின் ஆளுமை மிகவும் ஆழமானது. அனைவரும் விரும்பும் , குபீர்ச் சிரிப்பு நகைச்சுவைகளை, யதார்த்தமான வகையில் தந்துகொண்டிருக்கும் கலைஞர் வடிவேலு அவர்கள் ! நமது அன்றாட பேச்சிலும், இணையத்திலும், மீம்ஸ்களிலும், வடிவேலுவின் வசனத்தை , வார்த்தைகளை நிச்சயம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு, ட்விட்டரில் #prayfornesamani என்ற ஒரே வார்த்தை மூலம், வடிவேலு உலக அளவிலும் பிரபலமாகிவிட்டார். ”ஆணியே பிடுங்கவேண்டாம்” என்று போகிற போக்கில் காண்ட்ராக்டர் நேசமணியாக அவர் சொல்லும் வசனத்தை ஆழமாகப் பார்க்கும்போது, பல்வேறு மேலாண்மைக் கருத்துக்கள் பிடிபடும். அவற்றை அப்படியே எழுத்தில் சொல்லமுடியுமா என்று சிந்தித்ததன் விளைவுதான் இந்த நூல்! நேரடியாக நிர்வாக யுக்திகளைச் சொல்வதை விட , வடிவேலுவின் பிரபலமான வசனங்களை எடுத்து, அதிலிருக்கும் மேலாண்மைக் கருத்துகளை மையப்படுத்தி ஒருங்கிணைத்து, ஒரு சுவாரஸ்யமான, ஜாலியான கதைபோன்ற தொகுப்பாகத் தருவதுதான் இந்த நூலின் நோக்கம். நேரடியாக வாங்க : +91-94440-86888
|