அன்பே தவம் - Anbae Thavam

அன்பே தவம்

அன்பே தவம்
ஆசிரியர்: தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
பதிப்பாளர்: விகடன் பிரசுரம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2020
பக்கங்கள்: 1
எடை: 1 கிராம்
வகைப்பாடு : ஆன்மிகம்
ISBN:

இருப்பு இல்லை

விலை: ரூ. 240.00
தள்ளுபடி விலை: ரூ. 240.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.’ ‘அன்பு இல்லாதவர், எல்லாவற்றையும் தனக்கு உரியது என்பர்; அன்பு உள்ளவர்களோ, எனது உயிரும் பிறருக்கே என்பர்’ என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. ஆன்மிக நெறிகளும் அன்பைத்தான் முதற்பொருளாகக் கூறுகின்றன. எல்லா மதங்களின் கோட்பாடுகளும் அன்பை அடிப்படையாகக்கொண்டு கட்டமைக்கப்பட்டவையே. இன்றைய அதி அவசர உலகில் சக மனிதரிடம், உயிர்களிடம் அன்புகாட்டுவது என்பது அரிதாகிப்போய்விட்டது. ஆனால், உலகெங்கினும் பிற உயிரிடம் இரங்கும் அன்புள்ளம்கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் தனி மனிதராகவோ, ஆன்மிகவாதிகளாகவோ, மருத்துவர் களாகவோ, தொண்டு செய்பவர்களாகவோ இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் தமிழ்நாட்டில் குன்றக்குடி ஆதீனம் பல்லாண்டுகளாக கல்வி உள்ளிட்ட பல அறப்பணிகளைச் செய்து வருகிறது. ஆன்மிக வழியில் அன்பை வலியுறுத்தும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஆனந்த விகடனில் எழுதிய தொடர் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக்கம் பெற்றுள்ளது. ‘அன்புநிலையே வாழ்வின் உயர்நிலை’ என்பதை வலியுறுத்தும் இந்த நூல், அனைவரும் படித்துப் பின்பற்ற வேண்டிய அறநூலாகும்!

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.