Home | Login | New User Registration | User Page | ![]() |
GPay/UPI id: gowthampub@indianbank | Bank Details: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
நெஞ்சக்கனல் - Nenjakkanal |
நெஞ்சக்கனல் ![]() பதிப்பாளர்: தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: டிசம்பர் 2018 பக்கங்கள்: 124 எடை: 100 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: 978-93-85594-30-4 இருப்பு உள்ளது விலை: ரூ. 100.00 தள்ளுபடி விலை: ரூ. 90.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: என் நாவல்களில், காந்திய இலட்சியங்களும், கவியின் நளினமுள்ள ஓர் இளைஞனைக் குறிஞ்சி மலரிலும், சத்திய வேட்கையோடு கூடிய ஒரு கல்லூரித் தமிழ் விரிவுரையாளனைப் பொன்விலங்கிலும், நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்கிற நக்கீர தைரியமுள்ள ஓர் உழைக்கும் பத்திரிக்கையாளனை 'நெற்றிக்கண்'ணிலும் படைத்தேன். இந்த நாவலிலோ சந்தர்ப்பவசத்தால் அரசியல்வாதியாக நேரிடும் 'பெரிய' குடும்பத்து மனிதர் ஒருவரைப் படைக்கிறேன். அந்நியர்களிடமிருந்து விடுதலை பெற்றும் சொந்த நாட்டின் சில பிற்போக்கான மனிதர்களிடமிருந்தும் பிரச்சனைகளிடமிருந்தும் தார்மீக விடுதலைப் பெற போராடிக் கொண்டிருக்கிற ஒரு தேசத்தில், உணவு, மொழி, தொழில், சமதர்மம், எல்லோருக்கும் நல்வாழ்வு ஆகிய சகல துறைகளிலும் நலன் நாடும் ஒரு தேசிய நற்போக்கு நிலையில் இந்த நாவல் பிறக்கிறது. (தீபம் நா. பார்த்தசாரதி) நேரடியாக வாங்க : +91-94440-86888
|