பணம்சார் உளவியல் - Psychology of Money |
பணம்சார் உளவியல் ஆசிரியர்: மார்கன் ஹௌஸ்ஸேல் பதிப்பாளர்: Jaico Publishing House - ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் மொழி: தமிழ் பதிப்பு: 5 ஆண்டு: 2022 பக்கங்கள்: 272 எடை: 200 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: 978-93-91019-19-8 இருப்பு உள்ளது விலை: ரூ. 325.00 தள்ளுபடி விலை: ரூ. 320.00 அஞ்சல் செலவு: ரூ. 0.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: பணத்தைச் சிறப்பாகக் கையாள்வது என்பது, நீங்கள் எவ்வளவு அறிந்திருக்கிறீர்கள் என்பதை மட்டுமே பொறுத்து அமைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அத்தகைய குணாதிசயத்தைக் கற்றுத்தருவது என்பது, மிகுந்த அறிவாளிகளுக்கே அரிதான செயல். பணத்தின் மேலாண்மையை, எப்படிக் கைக்குள் கொள்வது, எப்படி முதலிடுவது, எப்படி வணிக முடிவுகளை எடுப்பது போன்ற செயல்கள் பெரும்பாலும் கணக்கீடுகளின் மூலமாகச் செய்யப்படும் செயல்களாகும். அதற்கு உதவியாக, நாம் எப்படியெல்லாம் கையாள வேண்டும் என்று எடுத்துக் கூற, பல்வேறு சூத்திரங்களும் உள்ளன. ஆனால் உண்மையில் மக்கள் பொருளாதாரம் குறித்த அத்தகைய முடிவுகளை, வெறும் கணக்கீடுகளைக் கொண்டு எடுப்பதில்லை. பொதுவாக, இரவு உணவை உண்ணும் நேரத்திலோ, நிறுவனங்களில் நடக்கும் கூட்டங்களின் மத்தியிலோ அவர்கள் அத்தகைய முடிவுகளை எடுக்கின்றனர். அத்தகைய நிலையில், தங்கள் சொந்த அனுபவங்கள், உலகு குறித்த தங்கள் தனிப்பார்வை, கர்வம், தானெனும் அகம்பாவம், சந்தையாக்கத் திட்டங்கள், கிடைக்கப்போகும் சில சலுகைகள் இவை யாவும் எடுக்கும் அந்த முடிவுக்கான காரணிகளாக அமைகின்றன.பணம்சார் உளவியல்” என்னும் இந்நூலின், ஆசிரியர், பல்வேறு மக்கள், எப்படியெல்லாம் வித்தியாசமான முறைகளில் பணம் குறித்து யோசிக்கிறார்கள் என்பதை, 19 கதைகளின் மூலம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். மேலும் ஒரு மனிதனுக்கு, வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவுகளைக் குறித்து எப்படியான புரிதல் இருத்தல் அவசியம் என்பதையும் தெளிவுபடுத்துகிறார். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
© 2024 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |