சில நேரங்களில் சில மனிதர்கள் - Sila Nerangalil Sila Manithargal

சில நேரங்களில் சில மனிதர்கள்

சில நேரங்களில் சில மனிதர்கள்
ஆசிரியர்: ஜெயகாந்தன்
பதிப்பாளர்: காலச்சுவடு பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 10
ஆண்டு: 2014
பக்கங்கள்: 376
எடை: 430 கிராம்
வகைப்பாடு : புதினம் (நாவல்)
ISBN: 9789384641016

இருப்பு உள்ளது

விலை: ரூ. 425.00
தள்ளுபடி விலை: ரூ. 400.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: சமுதாயத்தில் பெரும் கலாச்சார அதிர்வுகளை ஏற்படுத்திய ஒரு சிறுகதையை நாவலாக விரித்து எழுதினால் எப்படி இருக்கும்? சிறுகதையின் பாத்திரங்களும் அவர்தம் வாழ்க்கையும் தொடர்ந்து என்னவாக ஆகின்றன என்னும் தேடலின் விளைவாய் உருவான நாவல் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. வாழ்வின் சாரத்தை ஒரு சிமிழுக்குள் அடைக்கும் முயற்சி சிறுகதை. வாழ்வின் முழுமையைத் தழுவ விழையும் விரிவான தேடல் நாவல். ஒரே நிகழ்வைச் சிறுகதையாகவும் நாவலாகவும் உருவாக்கியிருக்கும் ஜெயகாந்தன் அதன் மூலம் ஒவ்வொரு நிகழ்விலும் உள்ள புனைவுச் சாத்தியங்களை அற்புதமாக வெளிக்கொணர்கிறார். வன்பாலுறவுக்குப் பலியான ஒரு பெண் சமூகத்தின் குறை மதிப்புக்கு ஆளாவதையும் அவள் அதைச் சுயமரியாதையுடன் கம்பீரமாக எதிர்கொள்வதையும் இந்த நாவலில் ஜெயகாந்தன் சித்திரிக்கிறார். தமிழ்ப் புனைவுலகின் மறக்க முடியாத பாத்திரங்களுள் ஒன்றாக இந்த நாவலின் நாயகி உருப்பெறுகிறாள். அதே சமயம் குற்றம் இழைத்த ஆண் உட்பட இதர பாத்திரங்களையும் முழுமையாக வெளிப்படுத்த ஜெயகாந்தன் தவறவில்லை.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.