அள்ள அள்ளப் பணம் 9 - கடன்: தீதும் நன்றும் - Alla Alla Panam 9 - Kadan: Theedhum Nandrum

அள்ள அள்ளப் பணம் 9 - கடன்: தீதும் நன்றும்

அள்ள அள்ளப் பணம் 9 - கடன்: தீதும் நன்றும்
ஆசிரியர்: சோம. வள்ளியப்பன்
பதிப்பாளர்: கிழக்கு பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2022
பக்கங்கள்: 224
எடை: 250 கிராம்
வகைப்பாடு: வர்த்தகம்
ISBN: 978-93-90958-41-2

இருப்பு உள்ளது

விலை: ரூ. 250.00
தள்ளுபடி விலை: ரூ. 225.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையான அள்ள அள்ளப் பணம் நூல் வரிசையில் புது வரவு. கடன் என்பது இரு பக்கமும் கூர்மை கொண்ட ஒரு பளபளப்பான கத்தி. சாதுரியமாகக் கையாண்டால் மிகுந்த பலன் பெறலாம். பெரும் நிறுவனங்கள் தொடங்கி அரசாங்கங்கள் வரை அனைவருக்கும் கடன் இன்றியமையாததாகவே இருக்கிறது. அதே சமயம் கவனமின்றிப் பயன்படுத்தினால் யாராக இருந்தாலும் பதம் பார்த்துவிடும். செல்வம் சேர்க்கும் வழிகளையும் சேமிக்கும் வழிகளையும் தனது ‘அள்ள அள்ளப் பணம்’ தொடர் நூல் வரிசைமூலம் தொடர்ந்து பதிவு செய்துவரும் பொருளாதாரம் மற்றும் நிர்வாகவியல் நிபுணர் சோம. வள்ளியப்பன் எழுதியுள்ள இந்நூலின் ஆய்வுப்பொருள், கடன். கடன் என்பது பெரிய சப்ஜெக்ட். அடமான கடன், செக்குகள், பிராமிசரி நோட், செக் பவுன்ஸ், வங்கி கடன்கள், NBFC நிறுவனங்களில் இருந்து கடன்கள், லோன் ஆப்கள், வியாபாரக் கடன், தங்கத்தின் மீதான கடன், விவசாய கடன், வாகன, வீட்டுக் கடன் அதற்குரிய வரி விலக்குகள், கடனை திருப்பி தராவிட்டால் எடுக்கப்படக்கூடிய சட்ட நடவடிக்கைகள், சர்பாசி சட்டம் என பலவற்றைப் பற்றியும் ஒரு எளிமையான, அதே சமயம் விரிவான புத்தகம். கடன்கள் குறித்து, அவற்றின் நன்மை தீமைகள் குறித்து, கடன்கள் கிடைக்கும் இடங்கள் குறித்து, வாங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை குறித்தெல்லாம் அனைவருக்கும் புரியும் வடிவில் எளிமையாக இந்நூலில் வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். ‘அள்ள அள்ளப்பணம்’ வரிசையில் முந்தைய நூல்களைப் போலவே இந்நூலும் மிகுந்த கவனம் பெறும் என்பது உறுதி.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.