சிதறா கவனக் குவிப்பு - Hyper Focus

சிதறா கவனக் குவிப்பு

சிதறா கவனக் குவிப்பு
ஆசிரியர்: கிறிஸ் பெய்லி
மொழிபெயர்ப்பாளர்: PSV குமாரசாமி
பதிப்பாளர்: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2022
பக்கங்கள்: 266
எடை: 250 கிராம்
வகைப்பாடு: சுயமுன்னேற்றம்
ISBN: 978-93-5543-175-2

இருப்பு உள்ளது

விலை: ரூ. 350.00
தள்ளுபடி விலை: ரூ. 315.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: உங்களுடைய கவனக்குவிப்பை மிகச் சிறப்பாக நிர்வகிப்பதற்கும், உங்களுடைய படைப்பாற்றலை அதிகரித்துக் கொள்வதற்கும், அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கும் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு நடைமுறைக் கையேடு இது. இதில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்: குறைவான நேரம் வேலை செய்வது எப்படி நம்முடைய உற்பத்தித்திறனை உயர்த்துகிறது? நாம் நம்முடைய வேலையை எளிதாக்கிக் கொள்ளாமல் அதைக் கடினமாக்கிக் கொள்வது எப்படி நாம் அதிகமான வேலைகளைச் செய்து முடிப்பதைச் சாத்தியமாக்குகிறது? நாம் களைப்பாக இருக்கும்போது எப்படி நம்மால் படைப்பாற்றல்மிக்க வேலைகளைச் செய்ய முடிகிறது? ஒன்றின்மீது நம்முடைய கவனத்தைக் குவிக்க இதற்கு முன்பு ஒருபோதும் நாம் இவ்வளவு திணறியதில்லை. நாம் எப்போதும் ஏதாவது ஒன்றில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாலும்கூட, நாம் சாதிப்பது என்னவோ குறைவாகவே இருக்கிறது. கிறிஸ் பெய்லி, நம்முடைய கவனக்குவிப்பை நம்மால் முடிந்த அளவு சிறப்பாக நிர்வகிப்பதற்குத் தேவையான அபாரமான உள்நோக்குகளை இந்நூலில் நமக்கு வழங்குகிறார். நம்முடைய மூளை, ‘சிதறா கவனக்குவிப்பு’ என்று அழைக்கப்படுகின்ற ஆழமான கவனக்குவிப்பு நிலைக்கும், ‘சிதறுகின்ற கவனக்குவிப்பு’ என்று அழைக்கப்படுகின்ற படைப்பாற்றல்மிக்க நிலைக்கும் இடையே தாவிக் கொண்டிருக்கிறது என்பதை அவர் இதில் வெளிப்படுத்துகிறார். இவை இரண்டையும் செம்மையான விகிதத்தில் கலந்து வேலை செய்வது எப்படி நம்முடைய உற்பத்தித்திறனையும் படைப்பாற்றல் திறனையும் வெகுவாக உயர்த்தும் என்பதையும் அவர் இதில் நமக்குக் காட்டுகிறார்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.