ப்ளிங்க்: கண் சிமிட்டும் நேரத்தில் - Blink Kann Simittum Neraththil |
ப்ளிங்க்: கண் சிமிட்டும் நேரத்தில் ![]() மொழிபெயர்ப்பாளர்: சித்தார்த்தன் சுந்தரம் பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 448 எடை: 500 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: 978-93-83067-18-3 இருப்பு உள்ளது விலை: ரூ. 350.00 தள்ளுபடி விலை: ரூ. 315.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: நம்மைச் சுற்றியிருக்கும் உலகத்தை நாம் எப்படி புரிந்துகொள்கிறோம் என்பதை `தி டிப்பிங் பாயிண்ட்’ புத்தகத்தில் வழியாக மறுவரையறை செய்த மால்கம் க்ளாட்வெல், தற்போது `ப்ளிங்க்’ புத்தகத்தின் வழியாக நமக்குள் இருக்கக்கூடிய உலகத்தை நாம் புரிந்துகொள்ளும் உத்திகளைக் கற்றுத்தருகிறார். ஒரு தம்பதியை சில நிமிடங்கள் கூர்ந்து கவனித்து, அவர்கள் பேசிக்கொள்வதை உள்வாங்கி, அவற்றின் வழியாக அவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக நீடிக்குமா? அல்லது விவாகரத்தில் முடிந்துவிடுமா? என்று கணித்துவிட முடியுமா? உங்களுக்கு அறிமுகம் இல்லாத ஒரு மனிதரைச் சந்திக்கும்போது, அவர் குறித்த ஒரு துல்லியமான நிலைப்பாட்டை உங்களால் எடுத்துவிட முடியுமா? உங்களுக்கு முற்றிலும் புதியதொரு விஷயத்தைப் பார்த்த மாத்திரத்தில், அது குறித்த தீர்மானமான முடிவுக்கு உங்களால் வந்துவிடமுடியுமா? மேற்கண்ட மூன்று கேள்விகளுக்கும் முடியும் என்பதுதான் உங்கள் பதில் என்று வைத்துக் கொள்வோம். எனில், உங்கள் கணிப்பு எல்லா சமயங்களிலும் சரியாக இருக்குமா? எப்போது சரியாக இருக்கும்? அல்லது எப்போது தவறாகப் போகக்கூடும்…? மால்கம் க்ளாட்வெல்லின் ஆய்வில் உருவாகியிருக்கும் இந்தப் புத்தகம், உங்களைப் பற்றிய, உங்கள் முடிவெடுக்கும் திறன் பற்றிய கேள்விகளுக்கு உளவியல் ரீதியான பதில்களைக் கற்றுத்தருகிறது. வேக உணர்திறன்(Rapid Cognition)என்பது தேவதைகளின் ஆசிபெற்றவர்களுக்கு மட்டுமல்ல, சாமானிய மனிதருக்கும் சாத்தியமாகக்கூடியது என்பதை உளவியல் ரீதியாக நிறுவுகிறார் மால்கம் க்ளாட்வெல். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை அதன் உள்ளடக்க வீரியத்துக்குத் துளியும் பங்கம் வராமல் சுவாரஸ்யமாக மொழிபெயர்த்திருக்கிறார் சித்தார்த்தன் சுந்தரம். ”மிஸ்டர் க்ளாட்வெல் வரம் பெற்ற ஒரு கதை சொல்லி, எங்கே சென்றாலும் நினைவில் நிற்கக்கூடிய பாத்திரங்களையும், மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகளையும் கண்டறியக் கூ டிய திறமையுள்ளவர்” – ஜார்ஜ் ஆண்டர்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இந்தப் புத்தகத்தை வாங்குங்கள்: நீங்கள் சந்தோஷப்படுவீர்கள்” – டேவிட் புரூக்ஸ், நியூயார்க் டைம்ஸ் புக் ரெவியூ நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் அந்திமழை அழகிய தமிழ் மகள் பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு ஏகம் பதிப்பகம் க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணகி பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் நீலம் பதிப்பகம் பரிசல் புத்தக நிலையம் பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2022 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |