எம்.ஜி.ஆர் - MGR

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர்
ஆசிரியர்: ப. தீனதயாளன்
பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2019
பக்கங்கள்: 452
எடை: 525 கிராம்
வகைப்பாடு : வாழ்க்கை வரலாறு
ISBN: 978-93-83067-11-4

இருப்பு உள்ளது

விலை: ரூ. 333.00
தள்ளுபடி விலை: ரூ. 300.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திர வார்த்தையைக் கேட்டதும் மகுடிக்கு மயங்கும் பாம்பாக மாறிவிடுபவர்கள் தமிழக மக்கள். வெள்ளித்திரையிலும் சரி, அரசியல் களத்திலும் சரி, அவர் மட்டுமே வெல்லமுடியும்; அவரால் மட்டுமே வெல்ல முடியும் என்பது தமிழக மக்களின் பரிபூரண நம்பிக்கை. அதனால்தானோ என்னவோ, அவருடைய படத்துக்கு டிக்கெட் எடுக்கக் காட்டிய ஆர்வத்தை, அவருக்கு வாக்களிக்கும் விஷயத்திலும் கடைப்பிடித்தனர். அதுதான் அவரை வெற்றிக்கோட்டையின் உச்சியில் சென்று உட்காரவைத்தது. சினிமா, கட்சி, அரசியல், ஆட்சி என்று தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றிக்கோட்டை எட்டிப்பிடித்தவர் எம்.ஜி.ஆர். அத்தகைய மனிதரின் வாழ்க்கையில் அரங்கேறிய அத்தனை அசைவுகளையும் முழுமையாகப் பதிவுசெய்வது என்பது அசாத்தியமான காரியம். அதைச் சாத்தியப்படுத்த பலரும் முயன்றிருக்கிறார்கள். ஆனால் அந்த முயற்சிகள் எல்லாமே “யானை தடவிய குருடன் கதை’ போன்றே முடிந்திருக்கின்றன. அதற்குக் காரணம், எழுத்தாளர்கள் அல்ல, எம்.ஜி.ஆரின் பிம்பம் அத்தனை உயரமானது. என்றாலும், எம்.ஜி.ஆர் என்ற ஆகப்பெரிய ஆளுமையின் முழுப்பரிமாணத்தையும் கொண்டுவர ஒருவரால் நிச்சயம் முடியும் என்று என்னுடைய மனம் பல ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டே இருந்தது. அவர், மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பா. தீனதயாளன். பசித்த எம்.ஜி.ஆர், பரிதவித்த எம்.ஜி.ஆர், உழைத்த எம்.ஜி.ஆர், வீழ்ந்த எம்.ஜி.ஆர், வென்ற எம்.ஜி.ஆர், சாதித்த எம்.ஜி.ஆர், சறுக்கிய எம்.ஜி.ஆர், சர்ச்சைக்குரிய எம்.ஜி.ஆர், வாரிக்கொடுத்த எம்.ஜி.ஆர் என்று எம்.ஜி.ஆரின் அத்தனை அவதாரங்களையும் அழகுதமிழில் பதிவுசெய்திருக்கிறார் நூலாசிரியர் பா. தீனதயாளன்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.