மஹா பிடாரி - Mahaa Pidaari

மஹா பிடாரி

மஹா பிடாரி
ஆசிரியர்: யுகபாரதி
பதிப்பாளர்: நேர்நிரை
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: டிசம்பர் 2024
பக்கங்கள்: 160
எடை: 150 கிராம்
வகைப்பாடு: கவிதை
ISBN: 978-81-952838-9-7

இருப்பு உள்ளது

விலை: ரூ. 150.00
தள்ளுபடி விலை: ரூ. 135.00

அஞ்சல் செலவு: ரூ. 50.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: யுகபாரதியின் காதல் கவிதைகள், மொழியின் சாத்தியத்திலிருந்து பிறப்பவை அல்ல. சமகால வாழ்விலிருந்தும், அது சம்பவிக்கும் நிகழ்வுகளிலிருந்துமே உருவாகுபவை. ஒன்றே போல் இன்னொன்று எனும் தொனியை அவர் அறவே தவிர்த்து விடுகிறார். இன்றைய நவீன கவிதைகள், உரைநடைக்கு மிக அருகில் வந்த விட்ட போதிலும் இயல்பாகக் கவிதைகளில் இயைந்து வரும் ஓசையை அவர் வலிந்து விலக்குவதில்லை. பெரும்பாலோர் சொல்லாமல் விட்ட பகுதியிலிருந்தே தன் கவிதைகளை அவர் திறந்து கொள்கிறார். சாராய நெடியும், மாமிச வாடையும் அவர் கவிதைகளில் உண்டு. கொடியடுப்பில் குடல்கறி வேகக் கண்டதும், காதலில் குதூகலிக்கும் சொந்தங்களை கவிதைகளில் அவரால் மகிமைப்படுத்த முடிகிறது. எளிய மனிதர்களின் வாழ்வுடன் ஊடாடும் காதலை நூல் நெடுக நிறைத்திருக்கிறார். இளம் வயதில் யார் வீட்டு விசேஷத்திற்கோ போன போது அங்கே யாராலோ எதேச்சையாக எடுக்கப்பட்ட ஒளிப்படத்தைப் பார்த்ததைப் போல ஒரு வித கூச்சமும் குறும்பும் இக்கவிதைகளில் தென்படுகின்றன. அந்தந்த நேரத்தில் தோன்றிய மாய உணர்வுகளை மறைக்காமலும் குறைக்காமலும் தந்திருக்கிறார்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.